search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில்  முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
    X

    பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    பல்லடத்தில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    • பிறந்த நாள் விழா பல்லடம் கடை வீதியில் நடைபெற்றது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடத்தில்முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனின்114 வது பிறந்த நாள் விழா பல்லடம் கடை வீதியில் நடைபெற்றது. அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    பின்னர் அங்கிருந்த குழந்தைகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அ.தி.மு.க. பொருளாளர் தர்மராஜன், சமூக ஆர்வலர்கள், பாலசுப்பிரமணியம், மிருதுளா நடராஜன், அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×