search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக வலைத்தள  தாக்கத்தில் இருந்துவளர் இளம்பெண்களை  மீட்கும்   கடமை பெற்றோர்களுக்கு உள்ளது - குழந்தை வளர்ச்சி  திட்ட அதிகாரி பேச்சு
    X

    கோப்புபடம். 

    சமூக வலைத்தள தாக்கத்தில் இருந்துவளர் இளம்பெண்களை மீட்கும் கடமை பெற்றோர்களுக்கு உள்ளது - குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சு

    • ஊட்டச்சத்து உணவு முகாமில் பங்கேற்ற 50 வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள், கையேடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது
    • அத்தகைய காலகட்டத்தில் அவர்களை உடல் ரீதியாக பலமானவர்களாக மாற்ற சத்தான உணவுகள் மற்றும் மன ரீதியாக பலமானவர்களாக மாற்ற சரியான வழிகாட்டல்கள் அவசியமாகிறது.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரம் கடத்தூரில் மத்திய அரசின் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வேளாங்கண்ணி தலைமை தாங்கி நடத்தினார். முன்னிலை வகித்த வட்டார மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி வளர் இளம் பெண்களுக்கான தன்சுத்தம் பேணுதல் பற்றி விளக்கினார். சர்வ சிஷ்ய அபியான் சிறப்பாசிரியர் செந்தில்குமார் எதிர்கால வாழ்க்கை என்ற தலைப்பில் மாணவிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து நம்பிக்கையூட்டினார்.

    இயற்கையுடனான வாழ்க்கை என்ற தலைப்பில் நெல்சன், பள்ளி தலைமையாசிரியர் போதராஜ் ஆகியோர் பேசினர். மடத்துக்குளம் வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வேளாங்கண்ணி பேசியதாவது:-

    ஒரு பெண் குழந்தையின் 9 வயதில் தொடங்கி 19 வயது வரையிலான காலகட்டத்தை வளர் இளம்பெண்கள் என்று சொல்கிறோம்.பெண் குழந்தைகளைப் பொறுத்தவரை குழந்தைப் பருவத்தைக் கடந்து வளர் இளம்பருவத்தை அடையும்போது உடல் மற்றும் உள்ள ரீதியாக பல்வேறு உணர்ச்சிகளை எதிர்கொள்கிறார்கள். உடல் உறுப்புகளின் வளர்ச்சி, குரலில் மாற்றம், மாதவிடாய் கால தொடக்கம், அதிகரிக்கும் உணர்ச்சிகள், எண்ணங்களில் மாற்றம் என பல மாறுதல்களை சந்திக்கின்றனர். அத்தகைய காலகட்டத்தில் அவர்களை உடல் ரீதியாக பலமானவர்களாக மாற்ற சத்தான உணவுகள் மற்றும் மன ரீதியாக பலமானவர்களாக மாற்ற சரியான வழிகாட்டல்கள் அவசியமாகிறது.

    மேலும் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தால் அந்த வயதில் ஏற்படும் தடுமாற்றங்களிலிருந்து வளர் இளம்பெண்களை மீட்டெடுக்க வேண்டிய முதல் கடமை பெற்றோர்களுக்கு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆசிரியர்கள் மற்றும் சமூகத்துக்கும் இந்த கடமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஊட்டச்சத்து உணவு முகாமில் பங்கேற்ற 50 வளர் இளம்பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வகைகள், கையேடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை குழந்தைகள் மைய பணியாளர்களை ஒருங்கிணைத்து போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் கவுதமன் மற்றும் வட்டார திட்ட உதவியாளர் அனுசுயாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×