search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் நகராட்சி பள்ளிகளில் ரூ.80 லட்சத்தில் நவீன கழிப்பிட வசதிகள் - நகராட்சி தலைவர் தகவல்
    X

    கோப்புபடம். 

    பல்லடம் நகராட்சி பள்ளிகளில் ரூ.80 லட்சத்தில் நவீன கழிப்பிட வசதிகள் - நகராட்சி தலைவர் தகவல்

    • தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார்
    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி மன்ற கூட்டரங்கில் நகராட்சி கூட்டம் நடந்தது. இதற்கு தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமை தாங்கினார். இதில் ஆணையாளர் முத்துசாமி, பொறியாளர் சுகுமார், சுகாதார அலுவலர் செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் வரதராஜன், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்திய சுந்தர்ராஜ், பணி மேற்பார்வையாளர் ராசுக்குட்டி, வருவாய் ஆய்வாளர் நந்தினி பாக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து நகராட்சி தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள அண்ணா நகர், கொசவம்பாளையம், கல்லம்பாளையம், சேடபாளையம், பி.டி.ஒ.காலனி, ராயர்பாளையம், பல்லடம் கிழக்கு, பல்லடம் மேற்கு ஆகிய 8 நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தண்ணீர் வசதியுடன் ரூ.80 லட்சம் மதிப்பில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் நலன் கருதி நவீன கழிப்பிடம் கட்டப்படவுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் 52 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×