search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் 7 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 7 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன

    • பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும்.

    திருப்பூர்:

    வரும் கல்வியாண்டில் 164 உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்த, சமக்ர சிக் ஷா திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள164 அரசு உயர்நிலை பள்ளிகளின் விபரங்கள் மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் பிச்சம்பாளையம் புதூர், பாண்டியன் நகர், நெசவாளர் காலனி, முதலிபாளையம், கருவம்பாளையம், காரணம்பேட்டை, பூலுவப்பட்டி ஆகிய பகுதியிலுள்ள 7 உயர்நிலைப்பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

    இந்த பள்ளிகள் அனைத்தையும், மேல்நிலை பள்ளிகளாக மாற்றுவதற்குரிய கருத்துருவை இணைத்து அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்தாண்டு பிளஸ் -1 மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட அரசு பள்ளிகளை விட இந்த ஆண்டில் கூடுதலாக, 7 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த பள்ளிகளில் பாடம் நடத்த கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படும். மற்ற பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் அடிப்படையில் தரம் உயர்த்தப்படும் மேல்நிலை பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×