search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளான் உற்பத்தி - செயல் விளக்க பயிற்சி
    X

    கோப்புபடம்.

    காளான் உற்பத்தி - செயல் விளக்க பயிற்சி

    • கிராமப்புற இளைஞர்கள் மற்றும் காளான் வளர்ப்பவர்கள் பங்கேற்கலாம்.
    • பயிற்சி வகுப்பு வருகிற 27-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் கூறியதாவது:- பொங்கலூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் காளான் வித்து உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 27-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இதில், திருப்பூர் மாவட்ட விவசாயிகள், பெண்கள், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் காளான் வளர்ப்பவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியில், தாய்க்காளான் வித்து, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை காளான் வித்து உற்பத்தி செய்வது குறித்து செயல் விளக்கப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த இரு நாள் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 25ம் தேதிக்குள் (இன்று 04255 296155 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்யலாம். கூடுதல் விவரம் தேவைப்படுவோர் 63794 65045 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×