என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் அருகே சாலையை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை- தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு
Byமாலை மலர்3 July 2022 1:55 PM IST
- அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகின்றனர்.
- இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும்.
பல்லடம்:-
பல்லடம் அருகேயுள்ளஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் பல்லடம் தாசில்தாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சேகாம்பாளையத்தில், அரசு வழங்கிய இலவச வீட்டு மனை நிலத்தில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில், அதே பகுதியில் வசிக்கும் ஒருவர் பொதுவான காங்கிரீட் ரோட்டை உடைத்து, ரோட்டை ஆக்கிரமித்து அஸ்திவாரம் அமைத்துள்ளார்.
இதனை தட்டி கேட்டபோது அப்படித்தான் செய்வோம் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர். எனவே வருவாய்த்துறையினர் நிலத்தை அளவீடு செய்து, பொது ரோட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை செய்த அதிகாரிகள் அந்த இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றப்படும் என தெரிவித்தனர்.
Next Story
×