என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெள்ளை ஈக்களை அழிக்கும் மழை - விவசாயிகள் நிம்மதி
- மாவு பூச்சி தாக்குதலால் பப்பாளி விவசாயமே அழிந்தது.
- சமீப காலமாக வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது.
திருப்பூர்:
சில ஆண்டுகளுக்கு முன் மாவு பூச்சி தாக்குதல் தீவிரமாக இருந்தது. இதன் காரணமாக மல்பெரி, பப்பாளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, கொய்யா உள்ளிட்ட பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. மாவு பூச்சி தாக்குதலால் பப்பாளி விவசாயமே அழிந்தது.
பின் படிப்படியாக மாவு பூச்சி தாக்குதல் குறைந்ததால் விவசாயிகள் நிம்மதியடைந்திருந்த நிலையில், சமீப காலமாக வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் தென்னை மரம்கூட பட்டு போகிறது. இவற்றை மருந்து தெளித்தும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
தற்போது மழை தீவிரம் அடைந்துள்ளது. அதிக மழை வெள்ளை ஈக்களுக்கு அழிவை ஏற்படுத்தும். மேலும் ஓலைகளில் படிந்துள்ள அதன் எச்சங்களும் அகன்று விடும். இதனால், தென்னை மரங்கள் பாதிப்பில் இருந்து தப்பும். இயற்கையாகவே வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளதால் திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.