என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாநில அளவிலான கலைத்திருவிழா: திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 436 பேர் தேர்வு
- அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.
- உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
திருப்பூர்:
அரசுப்பள்ளி மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்த பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கலைத்திருவிழா பள்ளிகல்வித்துறையால் நடத்தப்பட்டது.மாவட்ட அளவிலான தனிநபர், குழு போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாநில அளவில் நடக்கவுள்ள போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் குழுவினர் விபரங்களை மாவட்ட கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தனிநபர் பிரிவில் 120 பேரும் குழுபிரிவில் 316 பேரும் தேர்வாகியுள்ளனர். அதில் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
குறிப்பாக காற்றுக்கருவி - இஜிரா (அரசு உயர்நிலைப்பள்ளி, சோழமாதேவி), ஓவியம் - ஸ்ரீசபரிஆகாஷ் (அரசு மேல்நிலைப்பள்ளி, மடத்துக்குளம்), இயற்கை காட்சி வரைதல் -- ஸ்ரீகிருஷ்ணாகுமார், ரூபன் (அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம்) ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.