search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன் மங்கலம் போலீஸ் நிலையம் இணைப்பு
    X

    கோப்புபடம். 

    திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன் மங்கலம் போலீஸ் நிலையம் இணைப்பு

    • 63.வேலம்பாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய 5 ஊராட்சிகள், சாமளாபுரம் பேரூராட்சி இடம்பெற்றுள்ளன.
    • போலீஸ் நிலையத்தில் 1 போலீஸ் இன்ஸ்பெக்டர், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட காவல்துறையின் கீழ் இருந்த மங்கலம் போலீஸ் நிலையம், திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானிய கோரிக்கையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    மங்கலம் போலீஸ் நிலையத்தின் கீழ் இச்சிப்பட்டி, பூமலூர், 63.வேலம்பாளையம், இடுவாய், மங்கலம் ஆகிய 5 ஊராட்சிகள், சாமளாபுரம் பேரூராட்சி இடம்பெற்றுள்ளன. இவற்றில் 6 தாய் கிராமங்கள், 34 குக்கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தும் திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்துடன் இணைய உள்ளது. இந்த போலீஸ் நிலையத்தில் 1 போலீஸ் இன்ஸ்பெக்டர், 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், 50 போலீசார் பணியாற்றி வருகிறார்கள். திருப்பூர் மாநகர காவல் ஆணையரகத்தில் ஏற்கனவே 8 சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் உள்ளன. கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் இணைய இருக்கிறது.

    Next Story
    ×