search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் நல்லம்மன்  கோவிலில் சிறப்பு வழிபாடு - 27-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் நல்லம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு - 27-ந்தேதி நடக்கிறது

    • நொய்யல் ஆற்றின் குறுக்கில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது.
    • வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. கொங்கு சோழர் காலத்தில் இங்கு நொய்யல் ஆற்றில் பாயும் நீரை தடுத்து இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை நிரந்தரமாகவும் நல்ல முறையிலும் பயன்பட வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியான நல்லம்மாள் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது ஐதீகம். அவ்வகையில் அணையின் மையப்பகுதியில் அச்சிறுமிக்கு கோவில் அமைத்து நல்லம்மன் என்ற பெயரில் அப்பகுதியினர் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு வழிபாடு நடத்தும் ஒரு பிரிவினர் ஆண்டுதோறும் ஆடி மாதத்திலும், மற்றொரு பிரிவினர் கார்த்திகை மாதம் தீபத் திருநாளுக்கு அடுத்த நாளும் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அவ்வகையில் வருகிற 27-ந்தேதி, கார்த்திகை பவுர்ணமி அன்று நல்லம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக கோவில் வளாகம் முழுவதும் முழுமையாக வர்ணம் பூசி தயார்படுத்தும் பணி நடக்கிறது. மேலும் கார்த்திகை பவுர்ணமி அன்று இரவு முதல் விடிய விடிய வழிபாடு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×