search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    கொடியேற்று விழாவில் சோமாஸ்கந்தர் மற்றும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா - கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • திருப்பூர் விஸ்–வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்தி–ருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    திருப்பூர்:

    திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்–திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்பூர் அரிசி கடை வீதியில் பிரசித்தி பெற்ற விஸ்வேஸ்வரர், வீரராகவப் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளது. கோவில்களில் வருடந்தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு தேர்த்திருவிழா வருகிற ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் வருகிற 2-ந் தேதி விஸ்வேஸ்வர சாமி தேரும், 3-ந் தேதி வீரராகவப் பெருமாள் தேரும் இழுக்கப்படுகிறது. தேர்த்திருவிழாவிற்கான கொடியேற்று விழா நேற்று கோவிலில் நடைபெற்றது. முதலாவதாக விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்த கொடியேற்று விழாவில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் நமச்சிவாய கோஷத்துடன் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து வீரராகவப் பெருமாள் கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்று விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சாமி திருவீதி உலா நடைபெற்றது.

    Next Story
    ×