என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது
- அசோக்குமாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கஞ் சங்கிலியை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.
- 3 பவுன் தங்க சங்கலி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார்(46) இவர் கடந்த மார்ச் 2 ந்தேதி அன்று இரவு வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் இருந்து சேடபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டு உள்ளார். அதற்காக அவர் வண்டியை நிறுத்தி எங்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த 2 பேர் ஓடிவந்தனர். அசோக்குமாரை மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். பின்னர் இது குறித்து அசோக் குமார் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தபோது, அவர்கள் அசோக்குமாரிடம் மோட்டார் சைக்கிள் மற்றும் தங்கஞ் சங்கிலியை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். போலீசாரது விசாரணையில் அவர்கள் பல்லடம் அருகே உள்ள அருள் புரத்தைச் சேர்ந்த பாரதி என்பவரது மகன் ராகுல் (20) பல்லடம் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் தாமரைச்சந்திரன்(19,)திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் பிரவீன் குமார்(24) ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 பவுன் தங்க சங்கலி, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.