search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    X

    மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்து ராஜ் அவர்களின் புகைப்படம்.

    செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

    • குழந்தைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவத்துடன் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது.
    • அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாவட்டத்தில் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், கட்டுமான பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள், குறிப்பாக இளைஞர்கள், குழந்தைகளுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவத்துடன் உயிரிழப்புகள் ஏற்பட காரணமாக அமைகிறது. எனவே கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை போதுமான உயரத்தில் உறுதியான சுவர் அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கைவிடப்பட்ட குவாரி குழிகளை சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் கட்டுமான குழிகள், அகழிகளுக்கு வலுவான தடுப்புகளை அமைக்கவும், ஓட்டுனர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகை வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

    Next Story
    ×