search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எண்ணை விலை உயரும் நிலையில் சூரியகாந்தி விதைக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
    X

    கோப்புபடம்.

    எண்ணை விலை உயரும் நிலையில் சூரியகாந்தி விதைக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

    • விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகள் கொண்டு வரும் சூரியகாந்தி விதைகள் ஏல முறையில் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ சூரியகாந்தி விதைகள் 65 முதல் 73 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. சராசரி விலையாக ரூ.66-க்கு விலை போனதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ஊத்துக்குளி, குண்டடம், தாராபுரம், மடத்துக்குளம் பகுதிகளில் சூரியகாந்தி பயிரிடப்படுகிறது. உக்ரைன் போர் காரணமாக அங்கிருந்து சூரியகாந்தி விதைகள் உலக நாடுகளுக்கு ஏற்றமதியாவது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலைகள் அதிக அளவில் உயர்ந்து வருகிறது. மேலும் மற்ற எண்ணெய் வித்துகளில் இருந்து தயாராகும் எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது‌.

    இந்நிலையில், சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.230 ரூபாயை கடந்து விற்பனையாகும் நிலையில், விதைகளுக்கு போதிய விலை கிடைக்காமல் சரிவை சந்தித்து வருகிறது. சூரியகாந்தி பயிரிட்டு விதைகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால் அவர்களுக்கு நஷ்டம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    வெளிச்சந்தையில் சூரியகாந்தி எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், விதைக்கு விலை கிடைக்கவில்லை. பெரு நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து விதைக்கு விலை கிடைக்காமல் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Next Story
    ×