என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நவராத்திரியையொட்டி திருப்பூரில் துர்கா சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
- ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா அக்டோர் 1-ந் தேதி முதல் 5 -ந் தேதி வரை நடக்க உள்ளது.
- 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூரில் வசிக்கும் மேற்கு வங்க மக்கள் சார்பில் திருப்பூர் பெங்காலி கல்ச்சுரல் அசோசியேஷன் இயங்கி வருகிறது. இவர்கள் நவராத்திரி விழாவில் துர்கா சிலைகளை செய்து திருப்பூரில் பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடி வருகின்றனர்.கொரோனா ஊரடங்கால், 2 ஆண்டுகள் விழா நடைபெறாத நிலையில் 14வது ஸ்ரீதுர்கா பூஜை மகா உற்சவ விழா அக்டோர் 1-ந்தேதி முதல் 5 -ந் தேதி வரை, சவுடாம்பிகா கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கொல்கத்தா பாணியில் சிலை வடிவமைக்கப்படுகிறது.
கொல்கத்தாவில் இருந்து வந்துள்ள 15க்கும் அதிகமான கைவினை கலைஞர்கள், துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி, விநாயகர் சிலைகள் வடிவமைப்பு பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இது குறித்து சிலைகள் வடிவமைக்கும் கலைஞர்கள் கூறியதாவது :- கொல்கத்தாவில் இருந்து களி மண், கங்கை ஆற்று மண், வைக்கோல், கயிறுகள் மற்றும் அலங்கார பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைகளை அங்கிருந்து கொண்டுவர இயலாது என்பதால் திருப்பூர் வந்து சிலை வடிவமைக்கிறோம்.இயற்கை வண்ணத்தால் கலர் கொடுத்து அலங்கரிக்கப்படும். மேலும் கொல்கத்தாவை போலவே ஜரிகை, ஜடாமுடி, அலங்கார பொருட்களை கொண்டு தத்ரூபமாக அலங்காரத்துடன் சிலைகள் வடிவமைக்கப்படும். சிலை வடிமைப்பு பணி 25-ந் தேதிக்குள் நிறைவு செய்யப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.