search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    16-ந்தேதிக்குள் செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவு
    X

    கோப்புபடம்.

    16-ந்தேதிக்குள் செட்டாப் பாக்ஸ்களை ஒப்படைக்க கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவு

    • கேபிள் டி.வி, ஆபரேட்டர்கள், கேபிள் டி.வி., அனலாக் நிலுவை தொகையை வசூலிப்பதை அரசு நிறுத்த வேண்டும்.
    • தொகையை திரும்ப வழங்க வேண்டும் என மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன் தெரிவித்தார்.

    பல்லடம் :

    தமிழக அரசின் கேபிள் டி.வி., செட்டாப் பாக்ஸ்களை வாங்கிய கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் தனியார் செட்டாப் பாக்ஸ்களுக்கு மாறினர். இதனை அடுத்து அரசின் செட்டாப் பாக்ஸ்களை திரும்ப வழங்க வேண்டும் என தமிழக அரசு, கேபிள் டி.வி., ஆபரேட்டர்களுக்கு தகவல் தெரிவித்தது. ஆனால் கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ்களை திரும்ப வழங்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து கேபிள் டிவி., ஆபரேட்டர்களுடன் ஆலோசனை கூட்டம் பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம்,அவிநாசி, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி., ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன், பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா, பல்லடம் தாசில்தார் நந்தகோபால் மற்றும் கேபிள் டி.வி.,மாவட்ட மேலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள், கேபிள் டி.வி., அனலாக் நிலுவை தொகையை வசூலிப்பதை அரசு நிறுத்த வேண்டும், இலவசமாக செட் டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு வழங்கிவிட்டு தற்போதைய செயல்படாத பாக்ஸுகளுக்கு அவற்றின் கிரைய தொகை என்று சொல்லி பெருந்தொகையை கேபிள் டி.வி., ஆபரேட்டர்களிடம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும்.

    மக்களுக்கு இலவசமாக கொடுத்த செட்டாப் பாக்ஸ்களை நாங்கள் எவ்வாறு போய் மீண்டும் திருப்பி வாங்க முடியும். தொழில் நலிவடைந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் அரசு தேவையில்லாமல் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது என தெரிவித்தனர்.

    ஆனால் அதிகாரிகள் தரப்பில், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் கண்டிப்பாக செட்டாப் பாக்ஸ்களை திரும்ப வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான தொகையை திரும்ப வழங்க வேண்டும் என மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன் தெரிவித்தார்.

    எனவே வரும் 16-ந்தேதிக்குள் இதனை செலுத்தாவிட்டால் செலுத்தாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×