search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருப்பூரில் தொடர் தீ விபத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    பனியன் நிறுவனம் தீப்பிடித்து எரிந்த காட்சி.

    திருப்பூரில் தொடர் தீ விபத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி

    • கழிவுக் கிடங்கில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் கரும்புகை எழுந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.
    • கடந்த வாரம் திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின.

    திருப்பூர்:

    திருப்பூா் புதுப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பின்னலாடை கழிவுக்கிடங்கு உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்டத் தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளா்கள் குடியிருப்பில் இருந்துள்ளனா். இந்நிலையில், கழிவுக் கிடங்கில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் கரும்புகை எழுந்ததை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா்.

    இதுகுறித்து திருப்பூா் தெற்கு தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலா் வி.மோகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்றனா். எனினும் கிடங்கில் பரவிய தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

    இதையடுத்து, திருப்பூா் வடக்கு, அவிநாசி, காங்கயம் மற்றும் ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக 4 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் வரை போராடி தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள், எந்திரங்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த வாரம் திருப்பூர் காதர்பேட்டை பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசமாகின.

    தற்போது பின்னலாடை கழிவுக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர் தீ விபத்தால் திருப்பூர் பொதுமக்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×