என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடிய எதிரி பிளாஸ்டிக்
- சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
- பிளாஸ்டிக்கின் நச்சுப் பகுதிகள் கடல் உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்றடைகின்றன.
திருப்பூர்:
வன உயிரின வாரத்தை முன்னிட்டு திருப்பூர் வனச்சரகம் மற்றும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில் வனவிலங்கு பாதுகாப்புக்கான கூட்டாண்மை என்ற மையகருத்தை வலியுறுத்தி இன்று நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பிளாஸ்டிக் இல்லா பறவைகள் சரணாலயமாக மாற்றுவதற்கு பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும் கலை நிகழ்ச்சி நடத்தியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
வனச்சரக அலுவலர் பேசுகையில், நெகிழி பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றை பறவைகளும், விலங்குகளும் சாப்பிட்டால் செரிமானம் ஆகாமல் இறந்து விடுகின்றன. பிளாஸ்டிக்கின் நச்சுப் பகுதிகள் கடல் உணவுகள் மூலம் மனித உடலுக்குள் சென்றடைவதால் பிளாஸ்டிக் மனித ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். உணவு சங்கிலிகள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்கலாம். பிளாஸ்டிக் உணவு சங்கிலியின் சிறிய உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் .அதுமட்டுமல்லாமல் நமது சந்ததிகளை பாதிக்கும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் வனவர்கள் முருகானந்தம், வெங்கடாசலம், உமாமகேஸ்வரி, சரகப்பணியாளர் சிவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ செயலர்கள் சுந்தரம், விஜய், செர்லின், தினேஷ்கண்ணன், ஜோஷ்வா கிஷோர் ஆகியோர் தலைமையில் 55க்கும் மேற்பட்ட அலகு - 2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் சரணாலயத்தில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பிளாஸ்டிக் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.