search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழை சாகுபடியில் கன்று நேர்த்தி குறித்து செயல் விளக்கம்
    X

     வாழை சாகுபடியில் கன்று நேர்த்தி குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட காட்சி.

    வாழை சாகுபடியில் கன்று நேர்த்தி குறித்து செயல் விளக்கம்

    • கன்று நேர்த்தி மற்றும் தண்டு கூன் வண்டு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.
    • மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி தொட்டம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை இறுதியாண்டு வேளாண்மை மாணவர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேளாண் வணிக வளர்ச்சி இயக்குநர் சிவசுப்ரமணியன்,வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பயிர் பாதுகாப்பு வல்லுநர் ஜானகி ராணி ஆகியோரின் முன்னிலையில் வாழை சாகுபடியில் கன்று நேர்த்தி மற்றும் தண்டு கூன் வண்டு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

    இந்த செயல்விளக்கத்தில் விவசாயிகளுக்கு கன்றுகளை தேர்வு செய்தல் குறித்தும், ஈட்டி இலைக்கன்றுகளின் முக்கியத்துவம், பயன்கள், கன்றுகளை நேர்த்தி செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினர். கன்றுகளை நேர்த்தி செய்யும் பொழுது நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தவும், வாடல் நோய் தாக்கத்தைக் குறைக்கவும் உரிய கட்டுப்பாட்டு முறைகளில் பெசிலியோமைசிஸ் லிலாசினஸ் என்னும் பூஞ்சையை எவ்வாறு பயன்படுத்துவது குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் இப்பகுதியில் அதிகம் பயிரிடப்படும் நேந்திரன் ரக வாழையை அதிகம் தாக்கும் தண்டு கூன் வண்டுகளை கட்டுபடுத்தவும் உகந்த ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் குறித்தும், வாழை மட்டைகளை பயன்படுத்தி பொறி அமைத்து தண்டு கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×