search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - போலீசாருடன் தள்ளுமுள்ளு
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். 

    திருப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது - போலீசாருடன் தள்ளுமுள்ளு

    • கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.
    • வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள் அனுமதியின்றி இயங்கும் கல்குவாரி முறைகேடு குறித்து கனிமவளத்துறையினரிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாக திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறை இணை இயக்குனராக இருந்த வள்ளலை பணி இடைநீக்கம் செய்து இதற்கு முன்பு இருந்த கலெக்டர் வினீத் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை ரத்து செய்த கனிமவளத்துறை இயக்குனர் மீண்டும் வள்ளலுக்கு அதே இடத்தில் பணி நியமனம் வழங்கி உத்தரவிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஊழலுக்கு வழிவகுக்கும் கனிமவளத்துறை இயக்குனர் மற்றும் அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவதாக கூறி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இன்று திரண்டனர். மேலும் அதிகாரி வள்ளல் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விவசாயிகளை கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    Next Story
    ×