search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கிராமசபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வினீத் கலந்து கொண்ட காட்சி.

    அரசு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    • அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபைகூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.
    • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், படியூர்ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலெக்டர் வினீத் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது :- இனி வரும் காலங்களில் உலக தண்ணீர் தினமான மார்ச் 22-ந்தேதி மற்றும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர்-1ந்தேதி என 6 முறை கிராம சபைகூட்டம் நடைபெறும் என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு முறையும் தங்கள் பகுதியில் நடக்கும்கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் முழு அளவில் கலந்து கொண்டுஊராட்சியின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசித்து செயல்படும் போது அந்த ஊராட்சியின்அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து பணிகளும் செயல்பட கிராமசபைகூட்டம் ஊன்றுகோளாக அமைகின்றன.

    இது போன்ற கிராமசபை கூட்டத்தில்திட்ட பணிகளை மேற்கொள்ளப்படுவது மட்டுமின்றி பொது சுகாதாரத்தைகடைபிடித்தல், வீடுகள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைத்து டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் தாக்குதலை தடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஏதுவாக இருக்கும். ஊராட்சி அளவில் மகளிர் திட்டம் மூலமாக செயல்படும் மகளிர்சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. குழுக்கள் மிகவும்குறைவாக உள்ளதால் மேலும் குழுக்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    குழுக்கள் அமைக்க வட்டார அளவில் மற்றும் ஊராட்சி அளவிலான அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். ஒரு குழுக்களுக்கு 12 நபர்கள் இருந்தால் போதும். அவ்வாறு குழுக்கள் அமைக்கும் போது ரூ.1லட்சம் முதல் கடனாக வழங்கப்படுகிறது. அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் நல்லமுறையில்பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    முன்னதாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சமுதாய நிதியாக ரூ.1.10லட்சம் மதிப்பீட்டில் காசோலையையும், புதிய வங்கி கணக்கு புத்தகங்களையும், வேளாண்மை த்துறையின் சார்பில் ரூ.4.500 மதிப்பீட்டில் ரூ.2,000 மானியத்தில் விசை தெளிப்பானையும் கலெக்டர் வினீத் வழங்கினார். தொடர்ந்துபொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

    கூட்டத்தில் இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன்,தாராபுரம் கோட்டாட்சியர்குமரேசன், முன்னோடி வங்கி மேலாளர்அலெஸ்சாண்டர், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகேஷ்குமார், மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், படியூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜீவிதா சண்முகசுந்தரம், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்ராகவேந்திரன், நிர்மலா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×