search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பதிவுக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்
    X

    கோப்புபடம்

    பதிவுக் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - இந்திய கட்டுனர்கள் சங்கம் வலியுறுத்தல்

    • கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது.
    • விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பதிவுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து, கட்டுமானத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக இந்திய கட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில்,

    தமிழக அரசு அறிவித்து ள்ள பதிவுக் கட்டண உயர்வு அபரிமிதமாக உள்ளது. கட்டட ஒப்பந்தம் பதிவு செய்வதற்கான கட்டணம் 1 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக உயர்த்தப்ப ட்டுள்ளது. இதனால் பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அரசுக்கு தெரிவிக்காமலேயே பல பணிகள் நிறைவேற வாய்ப்புள்ளது.குடும்பத்தினர் அல்லாதோர் பொது அதிகாரம் பெறும்போது சொத்தின் மதிப்பில் 1 சதவீத கட்டணம் என அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில்முனைவோரை முடக்கிவிடும்.

    விடுதலைப்பத்திரம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சொத்தை அடமானம் வைக்கும்போது அதற்கும் 50 சதவீத கட்டண உயர்வு என்பது ஏற்கத்தக்கதல்ல.தொழில் செய்வோரையும், மக்களையும் வெகுவாக பாதிக்கும் கட்டண உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×