search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடையை சமாளிக்க சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் - மேயர் உத்தரவு
    X

    கோப்புபடம்.

    கோடையை சமாளிக்க சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் - மேயர் உத்தரவு

    • குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துவது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது.
    • 4-வது குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டமாக தற்போது நாளொன்றுக்கு கூடுதலாக 20 எம்.எல்.டி. குடிநீர் பெறப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் கோடையை சமாளிக்கும் வகையில் குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் மைய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கி பேசியதாவது :- கடந்த ஆண்டு கோடை யை திறம்பட சமாளித்தோம். தற்போது கூடுதல் குடிநீர் பெறப்படுகிறது. 4-வது குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டமாக தற்போது நாளொன்றுக்கு கூடுதலாக 20 எம்.எல்.டி. குடிநீர் பெறப்படுகிறது. இருப்பினும் மாநகரில் ஒரு பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறையும், மற்றொரு பகுதியில் 10 நாட்கள், 15 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை வழங்குவது மிகவும் முக்கியம். இதற்கு குழாய் திறப்பாளர்கள், குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் வரை அனைவரின் ஒத்துழைப்பு அவசியம்.

    மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்வதை முறைப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். வார்டில் அனைத்து பகுதிக்கும் 2 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வது கட்டாயம். அதை உறுதிப்படுத்த வேண்டும். கோடையை சமாளிக்க சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் கோவிந்தராஜ், உமாமகேஸ்வரி, உதவி ஆணையாளர்கள், இளம்பொறியாளர்கள், பாதாள சாக்கடை திட்ட ஒப்பந்ததாரர்கள், குடிநீர் திறப்பாளர்கள், குடிநீர் குழாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×