என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் வடக்கு உழவர் சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
Byமாலை மலர்9 Dec 2022 1:33 PM IST
- சாக்கடை கழிவுநீர் சரிவர செல்வதில்லை என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
- உழவர் சந்தை அருகே உள்ள சிறுவர் பூங்காவில் இருந்த முட்புதர்களை அகற்றி அதனை சரி செய்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வடக்கு உழவர் சந்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதாகவும் சாக்கடை கால்வாய்களை அடைத்து கடைகள் போடுவதால் சாக்கடை கழிவுநீர் சரிவர செல்வதில்லை என மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து இன்று காலை 1வது மண்டல உதவி கமிஷனர் சுப்ரமணியம் தலைமையில் உதவி பொறியாளர் ஹரி, சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் இன்று காலை உழவர் சந்தையை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றினர்.
மேலும் சாக்கடை கால்வாய்களை அடைத்து கட்டப்பட்டிருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளையும் பொக்லைன் எந்திரம் மூலமாக இடித்து அகற்றினர். மேலும் உழவர் சந்தை அருகே உள்ள சிறுவர் பூங்காவில் இருந்த முட்புதர்களை அகற்றி அதனை சரி செய்தனர்.
Next Story
×