search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் -   தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
    X

    எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் - தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

    • தேங்காய் விலை, அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
    • அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்

    அவிநாசி :

    விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில் எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அவிநாசி ஒன்றிய தலைவர் வேலுசாமி கூறியதாவது:- தேங்காய் விலை, அதலபாதாளத்துக்கு சென்று விட்டதால் விவசாயிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

    எனவே விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் வகையில் எம்.எஸ்.சாமிநாதன் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் உள்ளது போன்று கள்ளுக்கான தடையை நீக்கி, கள் இறக்கி விற்க அனுமதி வழங்க வேண்டும்.

    பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள சிவசுப்ரமணியம் அறிக்கையை அமல்படுத்தினாலே, கள்ளுக்கான தடை நீங்கும்.

    பாமாயில் இறக்குமதியை முற்றிலும் நிறுத்தி ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெயை விற்க வேண்டும். அன்னூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×