search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.௯௦௦ கோடி கடன்  - இணைப்பதிவாளா் தகவல்
    X

    கோப்பு படம்.

    கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.௯௦௦ கோடி கடன் - இணைப்பதிவாளா் தகவல்

    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2023-24-ம் ஆண்டில் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், உரிய தவணை தேதியில் பயிா் கடன்களை திருப்பி செலுத்தும் விவசாயிகள் வட்டியை செலுத்த தேவையில்லை. அதன்படி, 2023-24- ம் ஆண்டில் நவம்பா் 2-ந்தேதி வரை 21 ஆயிரத்து 395 விவசாயிகளுக்கு பயிா் கடனாக ரூ.243.09 கோடியம், கால்நடை பராமரிப்பு கடனாக 3 ஆயிரத்து 554 பேருக்கு ரூ.26.25 கோடியும் என மொத்தம் 24 ஆயிரத்து 949 விவசாயிகளுக்கு ரூ.269.34 கோடி வட்டியில்லாத பயிா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதேபோல 58 ஆயிரத்து 240 பேருக்கு நகை கடன்களாக ரூ.492 கோடியும், 375 பேருக்கு மத்திய கால கடன்களாக ரூ.3.78 கோடியும், 129 மாற்று திறனாளிகளுக்கு ரூ.84.95 லட்சமும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மூலம் 377 பேருக்கு ரூ.2.72 கோடியும், டாம்கோ மூலம் 98 பேருக்கு ரூ.78 கோடியும், 848 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.24 கோடியும், 155 பேருக்கு வீட்டு கடனாக ரூ.7.78 கோடியும், ஆயிரத்து 355 பேருக்கு சிறு கடன்களாக ரூ.4.44 கோடியும், 2 ஆயிரத்து 372 பேருக்கு இதர கடன்களாக ரூ.68.24 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×