என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆர்வமுடன் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள்
- எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும்
- தேர்வை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடுகளை செய்திருந்தது.
திருப்பூர் :
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு எழுத வேண்டும். தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு இன்று மதியம் தொடங்கியது. தேர்வை பாதுகாப்பாக நடத்துவதற்கு தேசிய தேர்வு முகமை ஏற்பாடுகளை செய்திருந்தது.திருப்பூர் மாவட்டத்தில்7மையங்களில் 4,147 பேர் தேர்வு எழுதினர். தேர்வர்கள் காலை 11 மணிக்கு தேர்வு மைய வளாகத்தில் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. இதையடுத்து இன்றுகாலையிலேயே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்தனர்.
பெருமாநல்லூர் கே.எம்.சி., பள்ளி மையத்தில் 552 பேர், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கல்லூரியில் 912, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளியில் 672, திருப்பூர் ஜெயந்தி பள்ளியில் 632, திருப்பூர் காங்கயம் ரோடு அபாகஸ் பள்ளியில் 167 , கூலிபாளையம் வித்யாசாகர் பள்ளியில் 900 , அவிநாசி, ஏ.கே.ஆர்., அகாடமியில் 312 பேர் என மொத்தம் 4,147 பேர் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வெழுத அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.நீட் தேர்வு நடத்தும் ஒருங்கிணைப்பாளராக கே.எம்.சி., பப்ளிக் பள்ளி முதல்வர் நாகமணி நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக மையங்களில் செய்யப்பட்டு இருந்த முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார். நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இணைய தளத்தில் இருந்து மாணவ-மாணவிகள் பதிவிறக்கம் செய்து தேர்வு எழுத வந்தனர்.அதனுடன் ஆதார் அட்டை அல்லது பான்கார்டை கொண்டு வந்திருந்தனர். தேர்வு எழுத இருந்த மாணவ-மாணவிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டு இருந்தது.அதன்படி இன்று அனைத்து தேர்வு மையங்களிலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து மாணவர்கள் தேர்வு மையத்திற்கு சென்றனர். இன்று காலையிலேயே தங்களது பெற்றோர்களுடன் வந்த மாணவ, மாணவிகள் ைமயங்களின் நுைழவாயிலில் காத்திருந்தனர்.தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள் அனைவரும் தங்கள் கழுத்தில் அணிந்திருந்த நகைகள், காதில் அணிந்த கம்மல், ரப்பர் பேண்ட் போன்ற பொருட்களை அகற்ற அதிகாரிகள் கட்டளையிட்டனர். இதையடுத்து மாணவிகள் தாங்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றோர்களிடம் கொடுத்தனர்.
தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையத்துக்கு வந்த மாணவர்கள் 'நீட்' நுழைவுச்சீட்டு, அடையாள சான்று தவிர வேறு எந்த ஆவணங்களையும் அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. தேர்வர்களுக்கு பால்பாயிண்ட் பேனா தேர்வு அறையில் வழங்கப்பட்டது. தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.தேர்வு அறைக்கு 1.15 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணிக்கு பிறகு மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.1.30 மணி முதல் 1.45 மணி வரை முக்கியமான அறிவுறுத்தல்கள், அறிவிப்புகள் மற்றும் நுழைவுசீட்டு சரிபார்த்தல் நடந்தது. 1.45 மணிக்கு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டது. 1.50 மணிக்கு தேர்வர்கள் வினாத்தாளில் விவரங்களை எழுத தொடங்கினர். 5.20 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வு எழுதி முடிக்கும் வரை பெற்றோர் அமருவதற்கான ஏற்பாடுகள் மையங்களில் செய்யப்பட்டு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற தேர்வில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வை எழுதினர். தேர்வு எழுதுவதற்கு முன்பு அவர்களை பெற்றோர்கள் வாழ்த்தி அனுப்பினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்