search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பல்லடம் அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
    X

    கோப்புபடம்

    பல்லடம் அரசு கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

    • இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட உள்ளது.
    • இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் வரும் மே.19-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

    பல்லடம்:

    தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவு இன்று வெளியாகியது. இதையடுத்து அரசு கல்லூரியில் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான, இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட உள்ளது.

    தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளியல், அரசியல் அறிவியல், பிகாம்.சி.ஏ, மற்றும் பல்வேறு பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தின் வாயிலாக இன்று முதல் வரும் மே.19-ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக்கட்டணம் ரூ 2 என மொத்தம் ரூ.50யை இணையவழியில் செலுத்தலாம். எஸ்.டி., எஸ்டி., எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

    விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கல்லூரி வளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம். மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், தேசியமாணவர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் அதற்கான ஆதாரச் சான்றிதழ் நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    மாவட்ட, மாநில அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். (கல்வி மாவட்டத்தில் மட்டும்சிறப்பிடம் பெற்றவர்களை ஏற்க இயலாது ) மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

    கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் மே 26-ந் தேதி காலை வெளியிடப்படும். மே 29-ந் தேதி சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெறும். மே 30-ந்தேதி முதல் பிற பிரிவினருக்கான முதல் கட்டக் கலந்தாய்வு அடுத்த மாதம் ஜூன் 2-ந் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×