search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப்பள்ளி  உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் பெற்றோர்களுடன் குவியும்  மாணவர்கள்
    X

    கோப்புபடம்.

    அரசுப்பள்ளி உயர்கல்வி வழிகாட்டி மையத்தில் பெற்றோர்களுடன் குவியும் மாணவர்கள்

    • மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே உயர்கல்வி நிறுவனங்களை சென்று பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.
    • தகவல்கள் பெற மையத்தை அணுகுவது அதிகரித்துள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றாலும் தங்களுக்கான விருப்பமான துறை, கல்லூரிகள், நுழைவுத்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கும் வாய்ப்பை இழக்கின்றனர்.இதை எடுத்துக்கூறி உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

    மாணவர்கள் பள்ளியில் படிக்கும் போதே உயர்கல்வி நிறுவனங்களை சென்று பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டது.ஒவ்வொரு அரசுப்ப ள்ளியிலும் செயல்படும், உயர்கல்விவழிகாட்டி மையங்களில் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட ப்பட்டுள்ளது.இம்முயற்சியால் மாணவர்கள் உயர்கல்வி குறித்த தகவல்கள் பெற மையத்தை அணுகுவது அதிகரித்துள்ளதாக தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், நகர்ப்புற மாணவர்களை விட, கிராமப்புற மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்கள், படிப்புகள் குறித்த புரிதல், சற்று குறைவாக தான் இருக்கும். இந்த தடையை நீக்க கொண்டு வரப்பட்ட உயர்கல்வி வழிகாட்டி மையம், அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாக செயல்படுகிறது.மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்த துறையை தேர்வு செய்யலாம் விண்ணப்பிக்கும் முறை, கவுன்சிலிங், வேலைவாய்ப்பு குறித்த கேள்விகளை கேட்கின்ற னர் என்றனர். இந்தநிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள்பெற்ற அதிகபட்ச மதிப்பெண்கள், தேர்ச்சிசதவீதத்தை எடுத்துரைத்து சேர்க்கை நடத்துமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏற்கனவே துவங்கப்பட்டது. ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் கொண்டு அரசின் திட்டங்களை எடுத்துரைத்து சேர்க்கை பணி மேற்கொள்கின்றனர்.சமீபத்தில் பிளஸ்- 2 ரிசல்ட் வெளியான நிலையில் பாடவாரியாக சென்டம், தேர்ச்சி சதவீதம், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை விளம்ப ரபடுத்தி அரசுப்பள்ளிகளின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை பொதுமக்களுக்கு விளக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், தனியார் பள்ளிகளை ஒப்பிடுகையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதிகம்.

    இங்கு மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பதே, மிகப்பெரிய சவால்.இதில் பல இடங்களில் பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை. ஆசிரிய ர்களின் முழு முயற்சியால் மட்டுமே தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது.அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் உள்ள கற்பித்தல் வசதிகள், ஹைடெக் ஆய்வகம், அதிக மதிப்பெண்கள் பெற்றால் இடஒதுக்கீட்டில் கிடைக்கும் சலுகை, நுழைவுத்தேர்வுகளுக்கு வழங்கப்படும் பயிற்சி ஆகியவற்றை எடுத்துக்கூறி சேர்க்கை நடத்தப்படுகிறது என்றனர்.

    Next Story
    ×