search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை உரம் தயாரிப்புக்கு மானியம்-விவசாயிகள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    இயற்கை உரம் தயாரிப்புக்கு மானியம்-விவசாயிகள் எதிர்பார்ப்பு

    • பசுமைப் புரட்சிக்கு பின் செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது.
    • செயற்கை உரங்களை இவ்வளவு செலவு செய்து நிலத்துக்கு இட்டாலும் மண் வளம் பாதித்து மண் மலடாகிறது.

    திருப்பூர் :

    பசுமை புரட்சிக்கு முன் பலரும் இயற்கை உரத்தையே பயன்படுத்தி வந்தனர். பசுமைப் புரட்சிக்கு பின் செயற்கை உரங்களின் பயன்பாடு அதிகரித்தது. துவக்கத்தில் விலை குறைவாக கிடைத்தது.தற்போது விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதற்கு பெருமளவு அரசு மானியம் கொடுத்து உர விலையை குறைத்து வினியோகிக்கிறது. அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் உர மானியத்திற்கு செலவாகிறது.செயற்கை உரங்களை இவ்வளவு செலவு செய்து நிலத்துக்கு இட்டாலும் மண் வளம் பாதித்து மண் மலடாகிறது.

    மனிதர்கள், விலங்குகள், பறவைகளுக்கு நோய்கள் பெருகி வருகின்றன. இதனால் மருத்துவச் செலவு சாமானிய மக்கள் சமாளிக்க முடியாத அளவு உயர்ந்து விட்டது.

    இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் கூறியதாவது:-

    செயற்கை உரத்துக்கு மானியம் தரும் அரசு இயற்கை உரம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இதன்மூலம் மண்வளம் காப்பதோடு மக்கள் நலனும் காக்கப்படும். மருத்துவ செலவு குறையும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மானியம் வழங்கப்படுகிறது.இது போல செயற்கை உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை முற்றிலும் ஒழித்து விட்டு, விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மானியம் வழங்கினால் இயற்கை உரம் தயாரிப்பு அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×