search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 நாள் வேலை திட்டத்தை மறுபரிசீலனை செய்து விவசாயத்திற்கான திட்டமாக மாற்ற வேண்டும்
    X

    எஸ்.வி. பூமிநாதன்

    100 நாள் வேலை திட்டத்தை மறுபரிசீலனை செய்து விவசாயத்திற்கான திட்டமாக மாற்ற வேண்டும்

    • 18 ஆண்டுகளில் மிக சொற்பமான ஏரி, குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன.
    • இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது வேதனையின் உச்சகட்டம்.

    திருப்பூர்:

    காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில தலைவர் எஸ்.வி. பூமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் 2006 ல் துவங்கப்பட்டது. இத் திட்டம் மூலம் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதால் 100 நாள் வேலை திட்டம் என பெயர் மாறிவிட்டன.

    இந்த திட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் பயன்பெறலாம் .திட்டத்தின் நோக்கம் ஏரி ,குளம் தூர்வாருதல் ,நீர் வழி தடங்கள் புனரமைப்பு ,குட்டைகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் நிலங்களில் பாசன மேம்பாட்டிற்கு பாடுபடுதல் போன்ற பணிகளுக்காகவே இத்திட்டம் துவங்கப்பட்டன .ஆனால் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள் ,லட்சத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிறைந்த நம் தமிழகத்தில் திட்டம் துவங்கப்பட்டு 18 ஆண்டுகளில் மிக சொற்பமான ஏரி, குளங்கள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளன.

    இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு உழைக்காமலேயே ஊதியம் கிடைத்து விடுகிறது என்கிற காரணத்தினால் கிராமப்புற விவசாயிகள் வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது வேதனையின் உச்சகட்டம்.

    சில நகர்புறங்களில் சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன . இப்படி எதற்குமே பயன்படாமல் மக்களை சோம்பேறி கூட்டமாக மாற்றிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் நிதி உதவியோடு தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் இந்த 100 நாள் வேலை திட்டத்தினை மறு பரிசீலனை செய்து சில திருத்தங்களை கொண்டு வந்து முழுமையாக விவசாயத்திற்கு பயன்படுத்தி தமிழகத்தில் விவசாயம் மேம்பட வழி வகுக்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×