search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்
    X

    அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற காட்சி.

    பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு திருக்கல்யாணம்

    • கடந்த 21 ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.
    • திருமூர்த்தி மலையில் இலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை சங்கிலி வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. நாடார் உறவின் முறையார் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட இந்த கோவில் திருவிழா கடந்த 21 ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கருப்பண்ணசாமி பூஜையும் திருமூர்த்தி மலையில் இலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.பின்பு பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் இதையடுத்து கொடியேற்றுதல், காப்புக்கட்டுதல், கும்பம், பூவோடு எடுத்துவருதல், மாவிளக்கு, பொங்கல் வழிபாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை சிவாச்சாரியார்கள் தலைமையில் நடந்தது.சூலத்தேவருடன் திருக்கல்யாண அலங்கா ரத்தில் அருள்பாலித்த பத்ரகாளிஅம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அதைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    மாலையில் கேரள செண்டைமேளம் மற்றும் மேளதாளங்கள் முழங்க அம்மன் திருவீதி உலா நடந்தது. சங்கிலி வீதி, அமணலிங்க வீதி, மற்றும் சதாசிவம் வீதி வழியாக திருவீதி உலா குட்டை திடலை அடைந்தது. அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து கொடி இறக்குதல், சக்தி கும்பம் கங்கையில் விடுதல், நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று மாலை 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும் அதனைத் தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை நாடார் உறவின் முறையார் சங்க நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×