என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் அய்யப்பன் கோவிலில் அன்னதானம்
- 63ம் ஆண்டு மண்டல பூஜை விமரிசையாக நடந்து வருகிறது.
- மண்டல பூஜை விழாவை தொடர்ந்து தினமும் மாலை 6:45 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
திருப்பூர் :
திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், 63ம் ஆண்டு மண்டல பூஜை விமரிசையாக நடந்து வருகிறது. ஆராட்டு உற்சவம், ஊர்வலம் நிறைவடைந்துள்ளது.
மண்டல பூஜையை தொடர்ந்து கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.நான்காவது வார அன்னதானம் நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் நடந்தது. ஸ்ரீசபரி ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
அவல் பாயாசம், போண்டாவுடன் அறுசுவை உணவு பறிமாறப்பட்டது. பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னதானத்தில் பங்கேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கரசேவகர்கள், மாலை வரை அன்னதானம் வழங்கும் பணியை தொடர்ந்தனர்.
ஸ்ரீஅய்யப்பன் பக்தஜன சங்கம், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மண்டல பூஜை விழாவை தொடர்ந்து தினமும் மாலை 6:45 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.