என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
- எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்குவது இதன் நோக்கம்.
- அடிப்படை கல்வியை கற்பிக்க ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் :
தமிழ்நாடு எழுத்தறிவு முனைவு ஆணையத்தின் கீழ் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் வாயிலாக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்குவது இதன் நோக்கம்.
இத்திட்டம் 38 மாவட்டங்களிலும் உள்ள நகர்ப்புற வார்டுகள், கிராமங்கள் மற்றும் ஊரக பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து திருப்பூரில் 18 ஆயிரம் பேரை இலக்காக கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பிக்க ஆயிரம் தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு வட்டார அளவில் பயிற்சி அளிக்க 45 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள்மேல்நிலை பள்ளியில் நடந்தது.
உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் வேல்முருகன், வடிவேல், குரல்குட்டை துவக்கப்பள்ளி ஆசிரியர் ஈஸ்வரசாமி ஆகியோர் பங்கேற்றனர்.