search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    அதிகாரிகளுடன் கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆலோசனை நடத்திய காட்சி. 

    குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் - அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

    • மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • புகார்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதி செய்யவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர்விநியோகப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, 6நகராட்சிகள் 15 பேரூராட்சிகள் 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவற்றில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டம்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டுத்திட்டம், கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடித்துபொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    மேலும் கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகார்களின் அடிப்படையில்உடனடியாக நேரில் களஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதிசெய்யவேண்டும். பழுது ஏற்படும் போது உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கவேண்டும்.

    பொதுமக்களுக்கு கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவகையில் பழுது நீக்க பணிகள் மற்றும் பழைய மோட்டார்களை அகற்றி புதியமோட்டார்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. நடப்பு ஆண்டிற்குள் அனைத்துவீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவினை உறுதி செய்துஒத்திசைவு செய்யும் பொருட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சம்ப் மூலமாக வழங்கப்படும்அளவினையும், மேலும் ஊராட்சிகள், குக்கிராமங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் பெறப்படும் குடிநீர் அளவினையும் கண்காணித்து ஆய்வு செய்து,குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் இணைந்து தினசரி வழங்கப்படும் குடிநீரின் அளவைகண்காணித்து இனிவரும் காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கமுறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தினந்தோறும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் கிராம ஊராட்சிகளில்விநியோகிக்கப்படும் குடிநீர்அளவினை மின்னணு நீர்உந்து கருவி பொருத்தி கண்காணித்து சீரான குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொறுப்பு ) ஜெகதீஸன், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி) வாணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறி யாளர்கள் செல்வராணி, சசிக்குமார், விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×