என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள முதல் மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதி உள்ளார்.
- அதில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கேரளா முதல் மந்திரி பினராயி விஜயன் கடிதம் எழுதி இருந்தார்.
மேலும், முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். மதகுகளை திறப்பது குறித்து கேரள அரசிடம் 24 மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் விதிகளின் அடிப்படையிலேயே தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.