search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்சிக்கனத்தை  கடைப்பிடிக்க மின்வயர்களை  மாற்ற வேண்டும் - அதிகாரி அறிவுறுத்தல்
    X

    கோப்புபடம்.

    மின்சிக்கனத்தை கடைப்பிடிக்க மின்வயர்களை மாற்ற வேண்டும் - அதிகாரி அறிவுறுத்தல்

    • வயர்களின் மேற்புறத்தில் கடினத்தன்மை ஏற்பட்டு சீக்கிரமாக உதிர்ந்து விடும்.
    • அதிகப்பட்சமாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வயர்களை மாற்ற வேண்டும்.

    அவிநாசி:

    அவிநாசி பேரூராட்சி பகுதியில் நான்கு ரத வீதிகள், சேவூர் ரோடு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் அரசு அலுவலகங்கள் மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றுக்கு அருகிலுள்ள கம்பங்களில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கான வயர்கள் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டவை.

    இதனால் ஆண்டுக்கணக்கில் வெயில், மழையில் நனைந்து சேதம் அடைந்து நாள்தோறும் ஏதாவது ஒரு வீதியில் மின் வயர் பழுதால் மின்சாரம் துண்டிக்க காரணமாக அமைகிறது. இதற்காக மின்நுகர்வோர் ஜெனரேட்டர், யு.பி.எஸ்., பயன்படுத்தும் போது செலவு அதிகரிக்கிறது.

    இது குறித்து மின்வாரிய சிறப்பு நிலை முகவர் அருள்பிரகாசம் கூறியதாவது:- மின்நுகர்வோரில் ஒரு சிலர் ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்ற வயர்கள், மின் சாதனங்களை வாங்கி பொருத்து கின்றனர். ஆனால் பலர் விலை மலிவான பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் வயர்களின் மேற்புறத்தில் கடினத்தன்மை ஏற்பட்டு சீக்கிரமாக உதிர்ந்து விடும். அதிலிருந்து மின்சாரம் லீக்கேஜ் ஆக வாய்ப்புகள் அதிகம். அதிகப்பட்சமாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது வயர்களை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×