search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்
    X

    ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம் நடைபெற்ற காட்சி.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம்

    • நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை பகுதியில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்ச நேயர் சுவாமி, சாந்த சொரூ பியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும்.

    தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்க வசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கும், கட்டளைதாரர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், சுவாமிக்கு தேர்த்திருவிழா நடைபெறும்.

    பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமைய முன்னிட்டு, காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சா மிர்தம் போன்ற பொருட்க ளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கனகாபி சேகத்துடன் அபிசேகங்கள் நிறைவு பெற்றது.

    தொடர்ந்து, திரையிடப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடை பெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை நடை பெற்றது. பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோயில் உதவி கமிஷ னர் இளையராஜா நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை செய்திருந்தார். நாமக்கல் கோட்டை பகுதியில் பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்ததால், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

    Next Story
    ×