search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குற்ற செயல்களை தடுக்கபொம்மிடியில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

    குற்ற செயல்களை தடுக்கபொம்மிடியில் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா

    • பாதுகாப்பை உறுதிப டுத்தவும், திருடர்களை கண்காணிக்கவும், பாலியல் சீண்டல்களை கண்காணிக்கவும், போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
    • குற்ற வாளிகளை கண்காணி க்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை குறைப்பதற்கு நகர் முழுவதும் 20 இடங்களில் 40 கேமராக்கள் பொருத்தப்படும்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    பொம்மிடியில் குற்ற செயல்களை தடுப்பதற்காக காவல்துறை, வணிகர் சங்கம் மூலமாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் 200-க்கும் மேற்பட்ட ஜவுளிக்கடை, மளிகை கடை, நகைக்கடை, ஹாட்டுவேர்ஸ், இரும்பு கடை, எலக்ரீக்கல் மற்றும் சிறு,பெரு வணிக வளாகங்கள் உள்ளது.

    பத்துக்கு மேற்பட்ட வங்கிகள், திருமண மண்டபங்கள், ெரயில் நிலையம், பேருந்து நிலையம் என முக்கிய இடங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் தினமும் பல ஆயிரம் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    பாதுகாப்பை உறுதிப டுத்தவும், திருடர்களை கண்காணிக்கவும், பாலியல் சீண்டல்களை கண்காணிக்கவும், போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

    மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டிபன் யேசுபாதம் உத்தரவின் பேரில் அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் அறிவுறுத்தலின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் தலைமையில் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    இதில் வணிகர் சங்க தலைவர் ஆசான்கான், செயலாளர் குமார், பொருளாளர் பிரசாத் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது விழாக்காலம் சில தினங்களில் இருப்பதால் கூட்ட நெரிசல், முக்கிய கடைவீதி பகுதிகளான ெரயில் நிலையம், ஓமலூர் சாலை, மசூதி தெரு, சேலம் மெயின் ரோடு, தருமபுரி மெயின் ரோடு, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கான துணி, மளிகை பொருட்கள், நகைகள் வாங்குவதற்காக பெருமளவு கூடுவார்கள்.

    அப்போது குற்ற வாளிகளை கண்காணி க்கவும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை குறை ப்பதற்கும், கூட்ட நெரிசலை கண்காணிப்பதற்கும் நகர் முழுவதும் 20 இடங்களில் 40 கேமராக்கள் பொருத்துவது எனவும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலையை விட்டு வாகன ங்களை உள்ளே தள்ளி நிறுத்தவும், கடைகளை போக்குவ ரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்துக் கொள்ளவும் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக வணிகர் சங்கத்தின் சார்பில் உறுதி வழங்கப்பட்டது.

    சமீபத்தில் பொம்மிடி பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்ததற்காக காவல் துறையினருக்கு வணிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×