என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி அருகே வவ்வால்களை பாதுகாக்க வெடி,வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் மக்கள் -3 தலைமுறைகளாக கடைப்பிடித்து வருகின்றனர்
- கொத்துக் கொத்தாக பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றது.
- வெடிசத்தம் இல்லாத அமைதியான தீபாவளியை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் சில கிராமங்களில் பாலூட்டி வகையை சேர்ந்த பறக்கவல்ல விலங்கான வவ்வால்களுக்காக வெடிசத்தம் இல்லாத அமைதியான தீபாவளியை அப்பகுதி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே பல்லேனஅள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏரி கரையில் உள்ள முனியப்பன் கோயிலை சுற்றி மிகவும் பழமை வாய்ந்த பெரிய, பெரிய மரங்கள் அமைந்துள்ளன. இங்கு மரக் கிளைகளில் கொத்துக் கொத்தாக பல்லாயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றது.
இந்த மரத்தில் உள்ள வவ்வால்கள், இரவு நேரங்களில் இரைதேடி காட்டுக்கு சென்று, பின் விடியற்காலையில் ஓய்விற்காக இந்த மரங்களை வந்தடைகிறது. தீபாவளி பண்டிகையின்போது வெடிச்சத்தங்களுக்கு பஞ்சமில்லாமல் ஆனந்தமாக கொண்டாடப்படும் நேரத்தில், இப்பகுதி மக்கள் வவ்வால்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் வெடிச்சத்தமின்றி அமைதியான முறையில் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
இந்த பகுதியில் வவ்வால்கள் இருப்பதால் கிராமத்திற்கும் மக்களுக்கும் பாதுகாப்பு என கருதி, இந்த பகுதிகளில் எந்தவித வெடிச்சத்தத்தையும், இக்குங்குள்ள மக்கள் எழுப்புவதில்லை.
மேலும் இந்த மரங்களில் உள்ள வவ்வால்களை பாதுகாத்தும் வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மக்கள் வவ்வால்களை கடவுளாகவும், நோய் தீர்க்கும் பாலூட்டியாகவும் வணங்கி வருகின்றனர். வவ்வால்கள் குடியிருக்கும் மரங்களுக்கு கீழ் உள்ள முனியப்பன் கோயிலில் திருவிழா நடந்தால் கூட, பம்பை உள்ளிட்ட வாக்கியங்களை அடிப்பதில்லை, வெடி வெடிப்பதில்லை.
மேலும் இங்குள்ள தெய்வங்களோடு இந்த வவ்வால்களையும் இணைத்து தொன்றுதொட்டு வழிபட்டு வருகின்றனர். மூன்று தலைமுறைகளாக வவ்வால்களை கிராமத்து மக்கள் பாதுகாத்து வருவதால் கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் நல்ல முறையில் வளர்ச்சியடைந்து வருகின்றனர். மேலும் குழந்தை பேறு இல்லை என்பதற்கே, இடமில்லை. குழந்தை இல்லை என்று வேண்டிய ஒரு சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருக்கின்றன என்றும் இதனால் தலைமுறை தலைமுறையாக இந்த கிராம மக்கள் வவ்வால்களை பாதுக்காப்பதற்காக இந்த கிராமத்தில் தீபாவளி மற்றும் விசேஷ நாட்களில் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை தியாகம் செய்து வருவதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்