search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
    X

    காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்- எடப்பாடி பழனிசாமி

    • ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை இந்த அரசு திறக்க உள்ளது.
    • போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக பள்ளிக் கல்வித்துறையின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆசிரியர்களுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவதற்கும், மாணவ கட்டுப்படுத்துவதற்கும் போதுமான தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலையில் வருகின்ற 12-ந்தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இதுபோல முதன் முறையாக சுமார் 12 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை இந்த அரசு திறக்க உள்ளது. எனவே, ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிந்த பிறகும் மற்றவர்கள் மீது சுமத்தாமல், தமிழகத்தில் ஆசிரியர் தகுதி பெற்றவர்கள் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தரமான கல்வியை வழங்கிட, போர்க்கால அடிப்படையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×