search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    பாலக்கோடு மார்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தக்காளி பெட்டிகளை படத்தில் காணலாம்.

    தருமபுரி மாவட்டத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

    • தருமபுரியில் வரத்து குறைவால் தக்காளி விலை உயர்ந்தது.
    • 15 கிலோ கொண்ட கூடை தக்காளி ரூ. 320 முதல் ரூ. 360 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி மற்றும் ராயக்கோட்டை பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் வருடம் முழுவதும் சுழற்சி முறையில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.

    இந்தப் பகுதியில் விளையும் தக்காளிகளை விவசாயிகள் ராயக் கோட்டை, ஜிட்டாண்ட அள்ளி, ஐந்து மைல்கள், பாலக்கோடு, வெள்ளிச் சந்தை உள்ளிட்ட தக்காளி மார்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இங்கிருந்து உள்ளூர் தேவை போக சேலம், திண்டுக்கல், கோவை, மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்க ளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

    தற்போது தரமில்லாத தக்காளி விதைகள் விற்பனை செய்வதால் தனியார் தக்காளி நாற்றுப் பண்ணைகள் மூலம் விவசாயிகள் ஒரு நாற்று ரூ. 1.50 வாங்கி நடவு செய்தனர். இருந்த நிலையில் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான பி.கொல்ல அள்ளி, ரெட்டியூர், பொப்பிடி, பெல்ரம்பட்டி, சோமன அள்ளி, கரகூர், திருமல்வாடி, உள்ளிட்ட கிராமங்களில் தக்காளி செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் புள்ளி அழுகல் நோய், ஊசிப்புள்ளி நோய், தண்டு இலைகள் நோய் மற்றும் பழங்களில் கோடுகள் உள்ளிட்டவை பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தினசரி 500 டன் தக்காளி விளைவிக்கப்பட்டது. உள்ளூர் தேவைக்குப்போக தென் மாவட்டங்கள் சென்னை மற்றும் கேரள கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ. 5 முதல் 7 வரை விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மார்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவால் விலை உயர்ந்து கிலோ ரூ.25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்ட அள்ளி, கம்பைநல்லூர். உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வது வழக்கம். நோய் தாக்கத்தால் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் தக்காளி வரத்து கடுமையாக சரிந்துள்ளது.

    இதனால் தக்காளியின் கொள்முதல் விலை உயர்ந்து கிலோ தக்காளி மொத்த விற்பனைக்கு ரூ. 25-க்கும் சில்லறை விற்பனையாக ரூ. 35-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 15 கிலோ கொண்ட கூடை தக்காளி ரூ. 320 முதல் ரூ. 360 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் தீபாவளியை யொட்டி தக்காளி விலை உயர வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×