search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நாளை கோலாகலமாக நடக்கிறது சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் மாநகர் விழாக்கோலம் பூண்டது
    X

    நாளை கோலாகலமாக நடக்கிறது சேலம் சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேகம் மாநகர் விழாக்கோலம் பூண்டது

    • சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
    • சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் முக்கியமான வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு வரலாற்று சிற்பங்களையும், மூலவரின் உருவசிலையையும் இக்கோவிலின் பிரகா ரத்தில் காணலாம். பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மனு டன் அருள்பாலிக்கிறார்.

    சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்கு, 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந்தேதி பாலாலயம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து, கும்பாபிேஷக விழா கடந்த 1-ந்தேதி (வியாழக்கிழமை) வெகுவிமரிசையாக தொடங்கியது. 6-வது நாளான இன்று மாலை 5 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூைஜ, 5-ம் கால யாக பூைஜ உள்ளிட்ட பூைஜகளும், தீபாராதனை நடக்கிறது.

    கும்பாபிஷேகம்

    7-வது நாளான நாளை (7-ந்தேதி) அதிகாலை 4 மணிக்கு மேல் மங்கள இசை, 6-ம் கால பரிவார சாமிகளுக்கு யாக பூஜை ஆரம்பமாகிறது. காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிேஷகம் செய்யப்படுகிறது. 7 மணிக்கு பிரதான யாக சாலைகளில் 6-ம் கால யாக பூஜை, 9 மணிக்கு மகா பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு யாத்ராதானம், அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சாமி, அம்மன், விநாயகர், சுப்ரமணியர், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகின்றன. 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள் மற்றும் அனைத்து ராஜ கோபுரங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் மற்றும் 11.15 மணிக்கு சுகவனேசுவரர் சாமி மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா குப்பாபிஷேகம், மகா தீபாராதனை கோலாக லமாக நடைபெறுகிது.

    திருக்கல்யாணம்

    பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம் செய்யப்படு கிறது. பின்னர் பக்தர்க ளுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை சமேத சுகவனேசுவரர் சாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதையடுத்து இரவு 7 மணிக்கு பஞ்ச மூர்த்தி கள் திருவீதி உலா நடைபெறுகிறது.

    சுகவனேசுவரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சேலம் மாநகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் இவ்விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு நாைள ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×