search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரி கடைகளில் கருப்புகொடி கட்டி வியாபாரிகள் போராட்டம்
    X

    கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் பேசிய காட்சி.

    நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க கோரி கடைகளில் கருப்புகொடி கட்டி வியாபாரிகள் போராட்டம்

    • வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
    • சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள் ஆர்ப்பாட்டம் முடியும் வரை அடைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ரூ. 79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தின் ஒரு பகுதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகள் நிறைவு பெற்ற பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கருப்பு கொடி போராட்டம்

    பஸ் நிலையம் திறக்கப்படாததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சந்திப்பு பகுதி வியாபாரிகள் பல்வேறு விதத்தில் பஸ் நிலையத்தை திறக்க கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழ்நாடு வணிகள் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்டம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு இன்று கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் செல்வ ராஜ் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் எம்.ஆர். சுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் விநியோ கஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் வெங்கடேஷ், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வடக்கு மாவட்ட செயலாளர் நயன்சிங், மாவட்ட கூடுதல் செயலாளர் விநாயகம், மாவட்ட பொருளாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோஷம்

    தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி சந்திப்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் அல்லது அதுவரை அனைத்து பஸ்களும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

    இதில் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர், ராஜா பில்டிங் வியாபாரிகள் நலச்சங்கம், த.மு. கட்டிட வியாபாரிகள் சங்கம், சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடைகளில் கருப்பு கொடி

    ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சந்திப்பு பகுதியில் உள்ள கடைகள் இன்று ஆர்ப்பாட்டம் முடியும் வரை அடைக்க ப்பட்டிருந்தது. மேலும் கோரிக்கைகளை வலிறுத்தி சந்திப்பு பகுதி களில் உள்ள கடைகளில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டிருந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட இணைச்செயலாளர் சாலமோன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஸ்டீபன் பிரேம்குமார், அருள் இளங்கோ, முகம்மது அலி, மாவட்ட துணைச்செயலாளர் மீரான், தொகுதி செயலாளர் சேக்பரித், கருப்பசாமி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் பகவதிராஜன்,

    ராஜா பில்டிங் வியாபாரி கள் நலச்சங்க தலைவர் எர்னஸ்ட் பர்னாந்து, சிந்துபூந்துறை வியாபாரிகள் சங்கத்தலைவர் ஆஞ்சீஸ், நெல்லை மாநகர் சந்திப்பு வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் சங்கர நாராயணன், த.மு. கட்டிட வியாபாரிகள் சங்கத்தலை வர் ரவீந்திரன், நெல்லை மாநகர் சந்திப்பு வியா பாரிகள் சங்கசெயலாளர் ஜெயச்சந்திரன், புதிய பஸ்நிலைய வியாபாரிகள் நலச்சங்க பொருளாளர் ஆனந்தமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    கையில் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வியாபாரிகள்.


    கடைகளின் முகப்பில் கருப்பு கொடி கட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.




    Next Story
    ×