search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்
    X

    போக்குவரத்தை திருப்பி விடும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்.

    சேலம் திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம்

    • சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் திருச்சி பிரதான சாலை அஸ்வின் பேக்கரி முதல் முங்கப்பாடி வரை நடைபெறுகிறது.
    • இந்த பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் சேலம் குகை திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கும் பணிகள் திருச்சி பிரதான சாலை அஸ்வின் பேக்கரி முதல் முங்கப்பாடி வரை நடைபெறுகிறது. இதற்கான பணி இன்று காலை தொடங்கியது.

    இந்த பணிகள் வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால் சேலம் குகை திருச்சி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து ராசிபுரம், மல்லசமுத்திரம், ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை மகுடஞ்சாவடி, பனமரத்துப்பட்டி, மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் வள்ளுவர் சிலை சந்திப்பு, மாவட்ட கலெக்டர் அலுவலக சந்திப்பு, 4 ரோடு சந்திப்பு, லீ பஜார், சண்முகா பாலம், சந்தைப்பேட்டை வழியாக நெத்திமேடு அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றன.

    புலிக்குத்தி சந்திப்பில் இருந்து பிரபாத் சந்திப்பு செல்ல வேண்டிய இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் புலிக்குத்தி பிரதான சாலை, சிவனார் தெரு, கருங்கல்பட்டி சாலை வழியாக திருச்சி சாலை சென்றன.

    இந்த போக்குவரத்து மாற்றத்தால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். கூடுதலாக போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×