search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் பஸ் நிலையத்தில் பஸ்டிரைவர்களிடம் போக்குவரத்து  போலீசார் அதிரடி சோதனை
    X

    கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்திய காட்சி.

    கடலூர் பஸ் நிலையத்தில் பஸ்டிரைவர்களிடம் போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை

    • பஸ்கள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏர் ஹாரன், குடிபோதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறதா?
    • போலீசார் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.

    கடலூர்:

    போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் குறித்து சோதனை மேற்கொள்ள கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு அறிவுறுத்தலின்பேரில் , போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் இன்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    அப்போது பஸ்கள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏர் ஹாரன், குடிபோதையில் வாகனங்கள் இயக்கப்ப டுகிறதா? ஆகியவை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த டிரைவர்களை அழைத்து, இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்து ஏர் ஹாரன்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர் இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    Next Story
    ×