என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு பள்ளி மாணவர்களுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி
ByDPIVijiBabu18 May 2023 3:09 PM IST
- 50 மாணவ-மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
- மாணவ-மாணவிகள் தோட்டக்கலை மற்றும் மலர்கள் சாகுபடி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை கால சிறப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளியில் செயல்பட்டு வரும் கொய்மலர் மகத்துவ மையத்தில் ஓசூர் மற்றும் தளி சுற்றியுள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவ-மாணவிகளுக்கு மலர் சாகுபடி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சியில், கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குனர் பூபதி கலந்து கொண்டு தோட்டக்கலை சார்ந்த திட்டங்கள், மலர்கள் சாகுபடி, உர மேலாண்மை, அலங்கார செடிகள் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்து பயிற்சி அளித்தார்.
அப்போது மாணவ-மாணவிகள் தோட்டக்கலை மற்றும் மலர்கள் சாகுபடி பற்றிய விவரங்களை கேட்டு அறிந்தனர். இந்த பயிற்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
×