search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிவாயு சிக்கனம், பாதுகாப்பு குறித்த பயிற்சி கருத்தரங்கு
    X

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கருத்தரங்கு நடந்த போது எடுத்த படம்.

    எரிவாயு சிக்கனம், பாதுகாப்பு குறித்த பயிற்சி கருத்தரங்கு

    • இந்த கருத்தரங்குக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார்.
    • எரிவாயுவை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.

    தருமபுரி,

    தமிழ்நாடு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக சுமார் 1200 புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க மாவட்ட கலெக்டர் சாந்தி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் காலை உணவு திட்டத்திற்கு பணிபுரியும் 250 பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது குறித்த பயிற்சி கருத்தரங்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்குக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு இண்டேன் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் ஞான வடிவேல்குமரன் வரவேற்றார்.

    இந்த கருத்தரங்கில் கோவை மண்டல இண்டேன் ஆயில் நிறுவனத்தின் துணை மேலாளர் சிவசூர்யா கிரண் கலந்துகொண்டு எரிவாயுவை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.

    இந்த முகாமில் மாவட்ட வளங்கள் அலுவலர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் பகித் முகமது நசீர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், காலை உணவு திட்ட அலுவலர்கள், அனைத்து இண்டேன் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×