search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஸ் போட்டியில்  ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை
    X

    செஸ் போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் பள்ளி மாணவ-மாணவிகள் சாதனை

    • 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தை பிடித்தார்.
    • மாணவ -மாணவிகளை தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டினர்.

    தென்காசி:

    தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 44-வது பிடா செஸ் ஒலிம்பிக் - 2022 போட்டிகளில் செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    அதில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ஹரி நந்தனா மாவட்ட அளவில் 3-வது இடத்தையும், மாணவன் ஜகத்பிரபு 17-ம் இடத்தையும் பிடித்து பரிசுகளை வென்றனர்.

    மாணவன் சமேரியா மாவிஸ் போட்டியில் கலந்துகொண்டு ஆறுதல் பரிசு பெற்றார். மாணவன் வசீகரன் போட்டியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை பெற்றார். வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளை பள்ளி தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி மற்றும் பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Next Story
    ×