search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்கள் பிரிவிற்கான 20-வது ஆண்டு விளையாட்டு விழா
    X

    பெண்கள் பிரிவிற்கான 20-வது ஆண்டு விளையாட்டு விழா

    • பெண்கள் பிரிவிற்கான 20-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது
    • திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்

    திருச்சி:

    திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பெண்கள் பிரிவிற்கான இருபதாவது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி, முதல்வர் இஸ்மாயில் முகைதீன் தலைமை உரையாற்றி வரவேற்புரை நல்கினார்.

    திருச்சி காவேரி மகளிர் கல்லூரியின் முதல்வர், சுஜாதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பேசினார்.

    விழாவில் 100 மீட்டர் ஓட்டம், தொடர் ஓட்டம், மெதுவாக இரு சக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 1500 க்கும் அதிகமான மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியில் பயிலும் மாணவிகள் தற்காப்பு கலைகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆங்கிலத் துறையும், மாணவியர் படை அணி வகுப்பில் என்எஸ்எஸ் மாணவிகளும், தனிநபர் சாம்பியன் பட்டத்தை, மாணவி ராஜேஸ்வரியும் பெற்றனர்.

    கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் காஜா நஜீமுத்தீன், பொருளாளர் ஜமால் முஹம்மது, உதவிச்செயலாளர் அப்துஸ் சமது, கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குநர; அப்துல் காதர் நிஹால், விடுதி நிர்வாக இயக்குநர் முகமது ஃபாசில், பெண்கள் விடுதி இயக்குநர் ஹாஜிரா ஃபாத்திமா, கூடுதல் துணை முதல்வர் முகமது சிஹாபுதீன், கல்லூரியின் தேர்வு நெறியாளர், நிதி ஆளுநர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

    முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா, உடற்கல்வித் துறையின் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார். நிறைவாக, துணை முதல்வர் முகமது இப்ராஹிம் நன்றி கூறினார்.

    Next Story
    ×